• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி மரணத்திற்கு பிறகு இரானில் என்ன நடக்கிறது? ஒரு புகைப்படத் தொகுப்பு

Byadmin

Mar 1, 2026


காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட செய்தியை சில இரானியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று இரவு பல நகரங்களில் மக்கள் கொண்டாடியதாக வெளியான வீடியோக்களை பிபிசி பெர்சியன் சரிபார்த்தது.

இன்று காலை, தெருக்களில் நடக்கும் பெரும்பாலானவை உச்ச தலைவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் அரசாங்க சார்பு நிகழ்வுகளாகத் தெரிகிறது என்று பிபிசி பெர்சியன் தெரிவித்துள்ளது. இரானில் இன்னும் அதிகாலை நேரம் தான், அது பிற்பகலில் மாறக்கூடும்.

மத்திய இரானில் உள்ள இஸ்ஃபஹானின் தெருக்களில் உள்ள காட்சி மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கார் ஹாரன்களை அடித்து ஆரவாரம் செய்வதை காட்டுகின்றன.

இரவு வானத்தில் பட்டாசுகள் வெடிக்கும்போது, ​​நெருப்பைச் சுற்றி மக்கள் கூடிவருவதை மற்றொரு வீடியோ காட்டுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பல குடும்பங்களும் தெருக்களிலும் வீடுகளிலும் கொண்டாடினர்.

By admin