• Wed. Mar 4th, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி மரணம் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

Byadmin

Mar 4, 2026


காமனெயி மரணம், இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இஸ்லாம், அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் விடுத்துள்ள செய்தியில், இந்த ‘கொடூரமான குற்றத்திற்கு’ தகுந்த பதில் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

“எங்கள் முழு வலிமை மற்றும் உறுதியுடன், இஸ்லாமிய சமூகம் மற்றும் உலகின் சுதந்திர மக்களின் ஆதரவுடன், இந்த ‘பயங்கரமான குற்றத்தைச்’ செய்தவர்களை நாங்கள் வருந்தச் செய்வோம்.”

அலி காமனெயி 37 ஆண்டுகளாக இஸ்லாமிய குடியரசை “மிகுந்த ஞானத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் வழிநடத்தினார் என்றும், அவரது மறைவுக்குப் பிறகு இரான் ஒரு கடினமான காலத்தை கடந்து செல்லும்” என்றும் பெசெஷ்கியன் கூறினார்.

86 வயதான காமனெயி இரானின் உச்ச தலைவராக இருந்தபோதிலும், இரானுக்கு வெளியே பாகிஸ்தான், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஷியா சித்தாந்தத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தியாவின் ஷியா சமூகமும் அவரை தங்கள் உச்ச தலைவராகக் கருதுகிறது.

By admin