0
தேவையான பொருள்கள்
வெங்காயம், கேரட்- தலா 4
சௌசௌ-2
தக்காளி- 8
உப்பு, காய்ந்த மிளகாய்- தேவையான அளவு
கடலைப் பருப்பு- 4 மேசைக் கரண்டி
கொத்தமல்லி- 5 மேசைக்கரண்டி
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
செய்முறை
அனைத்துக் காய்கறிகளையும் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாய், கடலைப் பருப்பு போட்டு வதக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் உப்பு, மிளகாய், கடலைப் பருப்பை முதலில் அரைக்கவும். பின்னர், அத்துடன் வதக்கிய காய்கறிகள், கொத்தமல்லி சேர்த்து துவையல் பதத்துக்கு அரைக்கவும். சத்தான காய்கறி துவையல் தயார்.