• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

Byadmin

Sep 20, 2025


அநுராதபுரம் பிரதான வீதியில் புதிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் யாசகர்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (18) இரவு  இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியில் இருந்த யாசகர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த யாசகர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin