காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கிக் காணாமல்போயிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மீட்புப் பணியாளர்களின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
நேற்றும் இன்றும் மீட்புப் பணியாளர்களின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் இதுவரை மொத்தமாக 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்கள் 6 பேரின் சடலங்களும், உழவு இயந்திரத்தின் சாரதியின் சடலமும் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணியாளர்களால் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல்போனவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
மத்ரஸா முடிந்து மாணவர்களும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீட்புப் பணியின்போது உழவு இயந்திரத்துடன் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன. இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல்போனார்கள் என்பதைத் துல்லியமாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், குறைந்தது இன்னும் 3 பேராவது காணாமல்போயிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
The post காரைதீவு வெள்ள அனர்த்தம்: இதுவரை 7 சடலங்கள் மீட்பு! appeared first on Vanakkam London.