• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

கார்க் தீவு: இரானின் இந்த தீவை அமெரிக்கா குறிவைப்பது ஏன்?

Byadmin

Mar 28, 2026


கார்க் தீவு

பட மூலாதாரம், Gallo Images/Orbital Horizon/Copernicus Sentinel Data 2024/Getty

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் கார்க் தீவு (Kharg Island) மீது மேலும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சிறிய தீவு இரான் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது, அங்கு மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்கள் உள்ளன.

பொருளாதார ரீதியாக கார்க் தீவு இரானின் வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது.

மார்ச் 13 அன்று, அமெரிக்கப் படைகள் கார்க் தீவு மீது குண்டுவீச்சு நடத்தியதாகச் செய்திகள் வந்தன. அந்த நேரத்தில், அங்கிருந்த இராணுவத் தளங்கள் “முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன” என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார், இருப்பினும் அமெரிக்கப் படைகள் கார்க் தீவின் எண்ணெய் தளங்களை இலக்கு வைப்பதைத் தவிர்த்தன.

இந்த விவகாரம் குறித்து அறிந்த நான்கு நபர்களை மேற்கோள் காட்டி அமெரிக்க செய்தி நிறுவனமான ‘ஆக்ஸ்யோஸ்’ வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரான் மீது அழுத்தம் கொடுப்பதற்காக கார்க் தீவைக் கைப்பற்ற அல்லது அதை முற்றுகையிட டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. ஹோர்மூஸ் நீரிணையை இரான் மீண்டும் திறக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.

ஹோர்மூஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழிகளில் ஒன்றாகும், இது இரான் கடற்கரையின் தெற்கே அமைந்துள்ளது.

By admin