ஈரக் காற்றின் இறுக்கத்தோடு
ஈரமாகிக் கிடக்கும் கண்கள்
ஒற்றை மணியோசை
எங்கள் ஒப்பாரியாக ஒலிக்கும்
ஒளிரும் தீபத்தின்
முன்னே தேசத்தை சுமந்தாவர் கனவுதெரியும்
நீருண்டு திரண்ட மேகங்கள் போல
கந்தக மேனியர் நினைவுகள் அலைமோதும்
வெடிக்கும் மின்னல் பேராளியாய்
அந்தச் சுமைகள் மாரிடிக்கும்
திரும்பி வராதவர்களை
காண திரும்பத் திரும்ப நாங்கள் நாடும்
நினைவாலயம் திறந்திருக்கும்
செங்காந்தள் ஊர் தெரிய
சிவப்பு மஞ்சள் கொடிகட்டும்
மேனி புல்லரிக்க கீதம் ஒலிக்கும்
யார் தடுத்தாலும் கண்ணீர் ஊற்றெடுக்கும்
ஒரு நிமிட அகவணக்கத்தில்
எம் தேச மாந்தரின் முகம் மலரும்
அவர் நேசித்த நாடும் மலரும்
நாங்கள் பூசித்த புதல்வர்கள் வாசம் வீசும்
பேச்சு விக்கும் வரிகள் தடக்கும்
நா வறண்டு போகும்
கண்ணீர் மட்டும் கண்ணத்தில் கோடு பதிக்கும்
இது கார்த்திகை காலம்.
வட்டக்கச்சி வினோத்
The post கார்த்திகை காலம் | வட்டக்கச்சி வினோத் appeared first on Vanakkam London.