• Tue. May 6th, 2025

24×7 Live News

Apdin News

கார்ல் டோனிட்ஸ்: ஹிட்லர் சாதாரண கடற்படை தளபதியை தன் வாரிசாக அறிவித்தது ஏன்? யார் அவர்?

Byadmin

May 6, 2025


ஹிட்லர், வரலாறு, கார்ல் டோனிட்ஸ், நாஜி ஜெர்மனி

பட மூலாதாரம், Getty Images

மே 1, 1945 அன்று மூன்றாம் ரைச்சின் (நாஜி ஜெர்மனி) பிரசார அமைச்சரும், ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவருமான, ஜோசப் கோயபெல்ஸ் கடற்படைத் தலைவர் கார்ல் டோனிட்ஸுக்கு தந்தி ஒன்றை அனுப்பினார்.

“அவசரம்”, “ரகசியம்” என்று அந்தத் தந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த செய்தி இவ்வாறு ஆரம்பமானது: “ஃப்யூரர் (ஹிட்லர்) நேற்று மதியம் 3.30 மணியளவில் மரணித்துவிட்டார்.”

முதல் வாக்கியம் இப்படி இருந்தால், அதற்கு அடுத்த வாக்கியம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது: “ஏப்ரல் 29ஆம் தேதி எழுதப்பட்ட உயிலில் நீங்கள் மூன்றாம் ரைச்சின் அதிபராகச் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ஹிட்லர், கார்ல் டோனிட்ஸை தனது வாரிசாகவும், கோயபெல்ஸை அடுத்த ‘சான்செலராகவும்’ தேர்வு செய்தார்.

By admin