• Tue. Nov 5th, 2024

24×7 Live News

Apdin News

காற்று மாசு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பள்ளிகள் மூடப்பட்டன!

Byadmin

Nov 5, 2024


பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான லாகூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், சுமார் ஒரு வாரத்துக்குத் முன்பள்ளிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மோசமான காற்று மாசுவில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

14 மில்லியன் மக்கள் வாழும் லாகூரில் பல நாள்களாகக் காற்றின் தரம் மோசமாகியுள்ளது. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 300ஐத் தாண்டினால் அது ஆபத்தைக் குறிக்கிறது. லாகூரில் அந்தக் குறியீடு கடந்த சனிக்கிழமை (02) 1,000ஐத் தாண்டியதாக IQAir தரவுகள் காட்டுகின்றன.

அடுத்த 6 நாள்களுக்குக் காற்றின் தரத்தில் மாற்றம் இருக்காது என்று வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, முன்பள்ளிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது. எதிர்வரும் சனிக்கிழமை (10) முன்பள்ளிகளை மூடும் திட்டம் நீட்டிக்கப்படவேண்டுமா என்பது மீண்டும் பரிசீலிக்கப்படும்.

அத்துடன், பாடசாலைகளில் கட்டாயம் முகக்கவசம் அணியப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

By admin