• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

காலமானார் நல்லகண்ணு : மருத்துவமனை அறிக்கை வெளியீடு

Byadmin

Feb 25, 2026


காலமானார் நல்லகண்ணு

கோப்புப்படம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, இரா.நல்லகண்ணு (கோப்புப்படம்)

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ” நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,” பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.’ என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

By admin