6
பிரபல கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் அவரது நீண்டநாள் காதலி ஜார்ஜினா ரொட்ரிகிஸூக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதனை, 31 வயதான ஜார்ஜினா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தமது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் படத்தையும் அவர் பதிவிட்டார்.
அவர்கள் முதன்முதலாக 2017ஆம் ஆண்டில் தங்களது காதல் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட நிலையில், இருவரும் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நிச்சயதார்த்தம் செய்திருக்கின்றனர்.