• Tue. Nov 26th, 2024

24×7 Live News

Apdin News

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Byadmin

Nov 26, 2024


தமிழ்நாடு - காவிரி வடிநிலப் பகுதிகள் - மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வது, அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது.

அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

சமீபத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தங்கள் சட்டத்தின் கீழ் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By admin