‘காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?
ஜூலை 31, 2025 அன்று காலை 11.15 மணிக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், “காவி நிறத்துக்குப் பயங்கரவாதத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு இல்லை. முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, எப்போதும் இருக்காது” என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.
மாலேகான் குண்டுவெடிப்பு தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில், “ஒரு இந்து ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘காவி பயங்கரவாதம்’ அல்லது ‘இந்து பயங்கரவாதம்’ குறித்த விவாதமும் மீண்டும் தொடங்கியது.
மாலேகான் வழக்கு விசாரணை தொடங்கியபோது தான் இந்த சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் மகாராஷ்டிராவில் ‘காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி’ அரசும் இருந்தது.
காவி பயங்கரவாதம் சொல்லைக் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் உருவாக்கி, தங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றன என இந்துத்துவத்தை மையக்கூறாக கொண்டு அரசியல் செய்யும் பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த சொல் முதலில் ஏன் பயன்படுத்தப்பட்டது? அதனைச் சுற்றிய சர்ச்சைகள் எவ்வாறு உருவானது ? இந்த காணொளியில் பார்க்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு