• Sat. May 3rd, 2025

24×7 Live News

Apdin News

காஷ்மீர் பற்றிய கருத்தால் இந்தியாவின் கோபத்தைத் தூண்டிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் யார்?

Byadmin

May 3, 2025


ஜம்மு காஷ்மீர், பஹல்காம், இந்தியா, பாகிஸ்தான், ஜெனரல் அசிம் முனீர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சில நாள்களுக்கு முன்பு காஷ்மீர் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள், பாகிஸ்தானின் ராணுவ நிலைப்பாடு மற்றும் காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்றத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டிவிட்டன.

ஜெனரல் அசிம் முனீர் பயன்படுத்திய வார்த்தைகளும், தொனியும், அவரது தலைமையின்கீழ் பாகிஸ்தான் ராணுவம் மோதலை நோக்கி மேற்கொண்ட நடவடிக்கையாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தான் அரசியலில் தலையிடும் அந்நாட்டு ராணுவம், நாட்டில் அரசை அமைப்பதிலும், அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, இதற்காக பாகிஸ்தான் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த அணு ஆயுதப் பிராந்தியத்தில் ஜெனரல் அசிம் முனீர் ஒரு முக்கிய நபராகக் காணப்படுகிறார்.

By admin