• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராகும் டிரம்ப்

Byadmin

May 11, 2025


காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க பரிந்துரையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நன்றி கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நீடித்த போர்பதற்றம் நேற்று மாலை நிறைவுக்கு வந்தது.

இருநாடுகளும் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அறிவிப்பதற்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்தியா கூறி வரும் நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

By admin