காஸாவில் இயங்கிய கடைசி மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் – என்ன நடந்தது?
காஸாவில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையான அல்-அலி பாப்டிஸ்ட் மருத்துவமனையின் ஒரு பகுதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலத்த சேதமடைந்தது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு மீது தாக்குதல் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறுகிறார். ஆனால், ஹமாஸின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் இங்கு இருந்ததாகவும், அதனால் மருத்துவமனையை குறிவைத்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது. காசாவின் சிவில் அவசர சேவையின்படி, இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதும் இல்லை.
கட்டடம் முற்றிலும் அழிக்கப்பட்டதால் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கட்டாயமாக இடம்பெயர வேண்டிய நிலைக்கு உள்ளானதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது காஸாவில் செயல்படும் ஒரே மருத்துவமனையாக இது உள்ளது.
இது ஒருபுறமிருக்க, காஸாவின் பெரும்பகுதி முழுவதும் தாக்குதலை விரைவில் தீவிரமாக விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு