3
போர் மற்றும் தடைப்பட்டுள்ள நிவாரண உதவிகள் காரணமாக காஸா முழுவதும் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பட்டினியால் மரணிப்போரின் எண்ணிக்கை காஸாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இரண்டு மாதங்களேயான சிசு மற்றும் 17 வயது இளைஞன் உட்பட 169க்கும் மேற்பட்டோர் பட்டினியால் மரணித்தனர்.
தொடர்புடைய செய்தி : காசாவில் பட்டினியால் 17 வயது இளைஞன் உயிரிழப்பு!
இந்நிலையில், காஸாவின் சவைதா கடற்கரை பகுதியில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட உணவுப் பொருட்களை பசியால் தவிக்கும் காஸா மக்கள் நீந்திச் சென்று சேகரிக்கின்றனர்.
பிற நாடுகள் விமானம் மூலம் காஸாவிற்கு உதவிப் பொருட்களை வீசத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், ஹமாஸ் முழுமையாக சரணடைவதும், பிணைக்கைதிகளை விடுவிப்பதும்தான் காஸாவில் இது போன்ற நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.