• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

காஸா அமைதித் திட்டம்: ஹமாஸ் பதிலளித்த பிறகு இஸ்ரேலுக்கு டிரம்ப் கூறியது என்ன?

Byadmin

Oct 4, 2025


டிரம்ப், ஹமாஸ், காஸா, இஸ்ரேல், நெதன்யாகு, போர்நிறுத்தம், அமைதி ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

காஸாவில் அமைதிக்காக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் காலக்கெடுவை அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதை ஹமாஸுக்கான ‘கடைசி வாய்ப்பு’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைதி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

அமெரிக்க அமைதி திட்டத்தில் கூறப்பட்டுள்ள பல முக்கியமான புள்ளிகள் பற்றி மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

By admin