காஸா குழந்தைகளுக்கு ஜோர்டானில் சிகிச்சை – திரும்பிச் செல்வது எப்போது?
மருத்துவ சிகிச்சைகளுக்காக காஸாவிலிருந்து ஜோர்டானுக்கு சில குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர்.
இதில் காயமடைந்தவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வான்வழி மற்றும் சாலை வழியாக பயணம் செய்து வந்தார்கள்.
ஆனால் போர் நிறுத்தம் தொடர்பான ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், இவர்கள் எவ்வளவு காலம் குடும்பத்தைப் பிரிந்திருப்பார்கள் என தெரியவில்லை.
முதலில் அழைத்துவரப்பட்டவர்களில், இதய பாதிப்புடைய ஆறு மாதக் குழந்தை நிவீனும் ஒருவர். சாலை வழியாக காஸாவிலிருந்து ஜோர்டானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நிவீன்.
காஸாவில் மருத்துவ உதவி தேவைப்படும் நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த 2,000 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களில் சிலர் ஜோர்டானுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு