• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

காஸா நகரை ‘ஆக்கிரமிக்கும்’ திட்டத்துக்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த 5 இஸ்லாமிய நாடுகள்

Byadmin

Aug 9, 2025


முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Dan Kitwood / Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலின் முடிவை சௌதி அரேபியா கடுமையாக விமர்சித்துள்ளது (கோப்புப் படம்)

காஸாவில் நடைபெற்று வரும் போரில் முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான, காஸா நகரை “ஆக்கிரமித்து” முழு கட்டுப்பாட்டில் எடுக்க நெதன்யாகு முன்மொழிந்த திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒப்புதல் வழங்கியுள்ளது.

காஸா முனையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம், போருக்கு முன்பு அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருந்தது, மேலும் மில்லியன் கணக்கான பாலத்தீனர்கள் இங்கு வசித்து வந்தனர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை “பெரியளவிலான கட்டாய இடம்பெயர்வு” மற்றும் “மேலதிகக் கொலைகளுக்கு” வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், தாங்கள் “கடுமையாக எதிர்க்கப் போவதாக” ஹமாஸ்உறுதிபூண்டுள்ளது.

இஸ்ரேலின் முடிவு குறித்து உலகம் முழுவதிலுமிருந்து எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேலின் இந்த முடிவு, மனிதாபிமான நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று இஸ்லாமிய நாடுகள் எச்சரித்துள்ளன.

By admin