• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

காஸா: பூஜ்ஜியத்திலிருந்து கட்டப்படும் நகரம் – நீண்ட பயணத்திற்கு காத்திருக்கும் மக்கள்

Byadmin

Jan 29, 2025


காஸா

பட மூலாதாரம், Getty Images

நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 15 மாதங்களாக புலம்பெயர்ந்து வாழ்ந்த காஸா மக்களுக்கு இது அதிக தூரம் இல்லை, ஏனெனில் காஸா ஒரு சிறிய பகுதிதான். போரால் கடுமையாக சேதமடைந்துள்ள இந்த பகுதியை நோக்கிய இவர்களது பயணம் என்பது ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தின் தொடக்கம் மட்டுமே.

இந்தப் பகுதியில் நிலவக்கூடிய மனிதாபிமான நெருக்கடியின் அளவைப் புரிந்துகொள்வது கடினம்.

“இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உள்கட்டமைப்புகள் இல்லை” என்று காஸா பத்திரிகையாளர் காடா எல்-குர்த் கூறுகிறார்.



By admin