3
காஸா மாணவர்களுக்கு உதவ இங்கிலாந்து அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதன்படி, காஸாவைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்து அரசாங்கத்தால் வழங்கப்படும் Chevening (செவனிங்) உதவித்தொகைகள் உலகம் முழுவதிலுமிருந்து சிறந்த மாணவர்களை இங்கிலாந்தில் ஒரு வருட முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர உதவுகின்றன.
இவ்வாண்டு 9 மாணவர்களுக்கு காஸாவிலிருந்து வெளியேற உதவி வழங்கப்படும். அவர்கள் ஓராண்டு முதுகலைப் பட்டப்படிப்புக்கு இங்கிலாந்துக்கு வருகிறார்கள்.
அத்துடன், தனியார் உதவித்தொகைகள் பெற்ற 30 பேருக்கு உதவி வழங்க இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார்.
2023ஆம் ஆண்டுக்கு பின் படிப்புக்காக காஸாவிலிருந்து இங்கிலாந்துக்குச் செல்லும் முதல் மாணவர் குழு இவர்கள் ஆவர்.
ஆனால், இஸ்ரேலின் அனுமதி இல்லாமல் அம்மாணவர்களால் காஸாவிலிருந்து வெளியேற முடியாது.
பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கும் திட்டத்தை இங்கிலாந்து அறிவித்ததிலிருந்து இஸ்ரேலுடனான அதன் உறவு மோசமடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.