• Tue. Dec 24th, 2024

24×7 Live News

Apdin News

கிசெல் பெலிகாட் வழக்கு: இயல்பான பாலுறவுவை ஆபாச படங்களும், இணையமும் எப்படி மாற்றுகின்றன?

Byadmin

Dec 24, 2024


கெசில் பெலிகாட் வழக்கு, பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

* இந்த கட்டுரையில் இடம் பெறும் தகவல்கள், நிகழ்வுகள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்

பெலிகாட்டின் பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனக்கு தெரிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது இந்த வழக்கு.

பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த போது, ஒவ்வொரு நுணுக்கமான தகவல்களையும் நான் அறிந்தேன். நான் என்னுடைய தோழிகள், மகள்கள், உடன் பணிபுரிபவர்கள், உள்ளூர் புத்தக க்ளபில் உள்ள பெண்கள் என அனைவருடனும் இது குறித்து விவாதித்தேன்.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கெசிலின் முன்னாள் கணவர், டோமினிக், அவருக்கு ரகசியமாக மயக்க மருந்துகளை கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் சந்தித்த ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து கெசிலை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

By admin