• Wed. Jan 15th, 2025

24×7 Live News

Apdin News

கிசெல் பெலிகாட் வழக்கு: சிறையில் உள்ள தந்தை பற்றி மகள் கூறுவது என்ன?

Byadmin

Jan 15, 2025


காணொளிக் குறிப்பு, நான் அப்பா என்று நினைத்தவர் குறித்த ஞாபகமே இல்லை எனக்கு – கெசில் பெலிகோட்டின் மகள் பேச்சு

‘என் தந்தை ஒரு குற்றவாளி’ – மனைவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரின் மகள் பேட்டி

எச்சரிக்கை: இதில் இடம் பெரும் தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கிசெல் பெலிகாட் என்பவர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை. அவர் தங்கியிருக்கும் கிராமத்தைச் சுற்றி இருக்கும் பல ஆண்களை, அவருடைய கணவர் டொமினிக் பெலிகோட், அழைத்து வந்து, கெசிலை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்து தற்போது டொமினிக் மற்றும் அவருடன் இந்த குற்றத்தில் ஈடுபட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவருடைய மகள் கரோலின் டரியன் பிபிசியிடம் பேசிய போது, டொமினிக்கை தன்னுடைய அப்பா என்று நினைக்கவே விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேற்கொண்டு பேசிய அவர், “என்னுடைய இதர குடும்ப உறுப்பினர்கள் நினைத்து நான் பெருமை அடைகிறேன். காவல்துறையினர் என்னுடைய இரண்டு புகைப்படத்தை என்னிடம் காட்டினார்கள். அந்த புகைப்படத்தில் சுய நினைவே இல்லாமல், நான் வேறொருவரின் உடையை அணிந்திருந்தேன். அதைப் பார்த்த பிறகு, என் அப்பாவால் நானும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பேன் என்பதை உறுதி செய்தேன்,” என்று கூறினார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin