• Thu. Mar 6th, 2025

24×7 Live News

Apdin News

கிரிப்டோ ரிசர்வ்: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பால் கிடுகிடுவென மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் எவை?

Byadmin

Mar 5, 2025


டிரம்ப், கிரிப்டோ ரிசர்வ், கிரிப்டோ நாணயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

  • எழுதியவர், மேக்ஸ் மட்சா
  • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக்குவதற்கு ஒரு புதிய கிரிப்டோ ரிசர்வை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அதில் தாம் சேர்க்க விரும்பும் ஐந்து கிரிப்டோ நாணயங்களின் பெயர்களையும் அறிவித்தார்.

டிரம்ப் குறிப்பிட்ட ஐந்து கிரிப்டோ பிட்காயின், ஈதேரியம், எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவற்றின் சந்தை மதிப்பு அவரது அறிவிப்புக்கு பிறகு உயர்ந்தது.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பயன்படுத்துபவர்களை கவர தீவிரமாக முயன்றார். மோசடி மற்றும் பணப்பதுக்கல் போன்ற காரணங்களால் கிரிப்டோ நாணயங்கள் மீது முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிர நடவடிக்கை எடுத்தார்.

இந்த புதிய கிரிப்டோ ரிசர்வ் எப்படி செயல்படும் என்பதில் தெளிவில்லை. வரும் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் முதலாவது கிரிப்டோ உச்சிமாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார், அன்றைய தினம் மேலும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin