• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

கிரீன்லாந்து: டிரம்ப் அறிவிப்பை சீனா எதிர்க்கும் வேளையில் ரஷ்யா மகிழ்வது ஏன்?

Byadmin

Jan 21, 2026


கிரீன்லாந்து, சீனா, டிரம்ப், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிரீன்லாந்தின் ‘ரஷ்ய மற்றும் சீன ஆக்கிரமிப்பு’ குறித்து டிரம்ப் அஞ்சுகிறார்

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு ‘அத்தியாவசியமானது’ என்றும், அது நடக்காவிட்டால், ரஷ்யாவும் சீனாவும் ‘கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும்’ என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாதிடுகிறார்.

“அங்கே ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன, ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன, சீனாவின் போர்க்கப்பல்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன,” என்று சமீபத்தில் டிரம்ப் கூறினார்.

கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் ஆளுகைக்குட்பட்ட பகுதியளவு தன்னாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும். டென்மார்க்கும் அதன் கூட்டாளிகளும் டிரம்பின் கிரீன்லாந்து திட்டத்தை எதிர்த்துள்ளனர்.

இதற்குப் பதிலடியாக தனது முன்மொழிவை எதிர்த்தால், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய 8 நாடுகள் மீது பிப்ரவரி மாதம் புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் ஜனவரி 17-ஆம் தேதி தெரிவித்தார்.

கிரீன்லாந்தை ‘ரஷ்யா மற்றும் சீனா ஆக்கிரமிக்கும்’ என்ற அச்சத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். கிரீன்லாந்து தொடர்பான டிரம்பின் எண்ணங்கள் இந்த இரு நாடுகளிலும் அதிருப்தியைத் தூண்டும் என்பது புரிந்துகொள்ளத்தக்கது.

By admin