• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?

Byadmin

Jan 29, 2025


அமரோக் மினரல்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி எல்டுர் ஓலாஃப்சன் கிரீன்லாந்தில் கிடைக்கும் தங்கத்தை முன்னிலைப்படுத்துகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என நினைப்பதாகக் கூறினார். அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, இந்த ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.

ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

கிரீன்லாந்தின் தெற்கு முனையில் கொந்தளிப்பான கடல் மற்றும் செங்குத்தான பனிப்பாறைகளின் நடுவே மோட்டார் படகு செல்லும்போது, கூர்மையான சாம்பல் சிகரங்கள் திடீரென்று நம் முன் தோன்றுகின்றன.



By admin