• Mon. Jan 19th, 2026

24×7 Live News

Apdin News

கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் மோதல் போக்கு – இந்தியாவுக்கு எவ்வாறு லாபமாக மாறும்?

Byadmin

Jan 19, 2026


பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், AFP via Getty Images

ஐரோப்பிய நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

அமெரிக்கா தனது நட்பு நாடுகள் மீதே வரிகளை விதிக்கும்போது, வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியா அமெரிக்காவை முழுமையாக ‘நம்ப’ முடியாது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கிரீன்லாந்து தொடர்பான தனது திட்டத்தை எதிர்த்தால், பிப்ரவரி முதல் இந்த எட்டு அமெரிக்க நட்பு நாடுகள் மீதும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக ஜனவரி 17 அன்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

பிப்ரவரி 1 முதல் இந்த நாடுகள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், இது பின்னர் 25 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும், கிரீன்லாந்து தொடர்பான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இது தொடரும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உண்மையில், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கவேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.

By admin