• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

கிரீன்லாந்து விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்: ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்த செய்தி

Byadmin

Jan 23, 2026


கிரீன்லாந்து குறித்து 'எதிர்கால ஒப்பந்தத்தின் கட்டமைப்பு' விவாதிக்கப்பட்டதாக கூறி, வரி அச்சுறுத்தலை கைவிட்ட டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தொடர்பாக ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இதற்கு முன், அந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்றும் அவரது திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிக்கத் திட்டமிட்டிருந்ததை அவர் கைவிட்டுள்ளார். இது நேட்டோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகான முடிவாகும்.

சமூக ஊடகங்களில், நேட்டோவுடன் நடைபெற்ற ‘மிகவும் பயனுள்ள சந்திப்பு’ கிரீன்லாந்து மற்றும் ஆர்க்டிக் பகுதிகளை உள்ளடக்கிய சாத்தியமான ஒப்பந்தத்தின் கட்டமைப்புக்கு வழிவகுத்ததாக டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அவர் அதிக விவரங்களை வெளியிடவில்லை.

நேட்டோவும் அந்த சந்திப்பை மிகவும் பயனுள்ளது என்று கூறியிருக்கிறது. டிரம்ப் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பு குறித்த விவாதங்கள், ஆர்க்டிக் பாதுகாப்பை உறுதி செய்வதையே மையமாகக் கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தது.

இதற்கு முன், உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) பேசிய டிரம்ப், ராணுவ வலிமையை பயன்படுத்தப்போவதில்லை என்றும், அந்தப் பகுதியின் உரிமையைப் பெற பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புவதாகவும் கூறினார்.

புதன்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர், “கிரீன்லாந்து மட்டுமல்ல, உண்மையில் முழு ஆர்க்டிக் பிராந்தியத்தையும் பொருத்தவரை, எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். இந்தத் தீர்வு நடைமுறைக்கு வந்தால், அது அமெரிக்க ஒன்றியத்திற்கும், நேட்டோவின் அனைத்து நாடுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

By admin