• Sat. Jan 10th, 2026

24×7 Live News

Apdin News

கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு டென்மார்க் தயாராகிறது

Byadmin

Jan 9, 2026


கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

இது தொடர்பான உரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லுண்ட் பவுல்சன் நேற்று (8) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கிரீன்லாந்து தொடர்பான சந்திப்பு அடுத்த வாரம் நடைபெறும் என முன்னதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது டென்மார்க் அரசும் பேச்சுவார்த்தைக்கு இணங்கியுள்ளது.

ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே சுமார் 80 சதவீதம் அமைந்துள்ள கிரீன்லாந்து தீவில், சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்யூட் இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து மிக முக்கியமானதாகும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். எனினும், இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

The post கிரீன்லாந்து விவகாரம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு டென்மார்க் தயாராகிறது appeared first on Vanakkam London.

By admin