• Thu. Feb 6th, 2025

24×7 Live News

Apdin News

கிருஷ்ணகிரி: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது எப்படி?

Byadmin

Feb 6, 2025


கிருஷ்ணகிரி அருகே கொடூரம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது

பட மூலாதாரம், Getty Images

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக அவர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) முனிராஜ் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தலைமையாசிரியரால் வெளிச்சத்துக்கு வந்த குற்றம்

அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராத நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். பிறகு, மாணவியின் வீட்டுக்கு சென்று பெற்றோரையும் சந்தித்துள்ளார்.

அப்போது அந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பதாகவும், அதில் ஈடுபட்டது அவரது பள்ளியின் ஆசிரியர்கள் என்றும் மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஒரு இடைநிலை ஆசிரியர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மாணவியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

By admin