• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

கிரெடிட் ஸ்கோர் – வங்கிக் கடன் என்ன தொடர்பு? கிரெடிட் ஸ்கோர் கணக்கிடுவது எப்படி? 5 விஷயங்கள்

Byadmin

Jan 7, 2025


கிரெடிட் ஸ்கோர், வங்கிக் கடன்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம்
  • பதவி, பிபிசிக்காக

கடனில்லா வாழ்க்கையே அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் கடன் இல்லாமல் வாழ்வது இன்றைய கால கட்டத்தில் சாத்தியமற்றது.

வீட்டுக் கடனாகவோ, வாகனக் கடனாகவோ, தனிநபர் கடனாகவோ… அல்லது குறைந்தபட்சம் கிரெடிட் கார்டாகவோ… கடன் என்பது ஏதோ ஒரு வகையில் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.

தனிநபர்கள் மட்டுமல்ல, மாநிலங்களும் நாடுகளும் கடன் வாங்கி பொருளாதாரத்தை நடத்துகின்றன. நாடுகளுக்கு `கிரெடிட் ரேட்டிங்’ (கடன் மதிப்பீடு) என்பதை வைத்து மதிப்பிடப்படுவது போல், தனி நபருக்கு `கிரெடிட் ஸ்கோர்’ மதிப்பீடு அவசியம்.

`கிரெடிட் ஸ்கோர்’ என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் நம்மிடம் உள்ளதா என்பதை குறிக்கும் மதிப்பீடு. ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அவ்வளவு கடனை பெறும் தகுதியை அவர் பெற்றிருக்கிறார் என்று அர்த்தம்.

By admin