• Mon. Jun 9th, 2025

24×7 Live News

Apdin News

கிர்: இந்தியாவில் சிங்கம், சிறுத்தைகளுடன் ஒரே பிரதேசத்தில் இந்த கிராம மக்கள் எப்படி வாழ்கிறார்கள்?

Byadmin

Jun 9, 2025


குஜராத், கிர், சிங்கம், புலி, மனிதர்கள்

பட மூலாதாரம், BIPIN TANKARIA

படக்குறிப்பு, பாரத்பாய் மற்றும் அவரது குழந்தைகள் இரும்பால் செய்யப்பட்ட கட்டிலில் உறங்குகிறார்கள்.

  • எழுதியவர், கோபால் கட்டேஷியா
  • பதவி, பிபிசி செய்தியாளர்

குஜராத் அரசு சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தது. 2025 மே 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெற்ற கணக்கெடுப்பின் விவரங்களை அந்த மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, குஜராத்தில் சிங்கங்களின் (ஆசிய சிங்கங்கள்) எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 674 ஆக இருந்தது.

குஜராத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 227 (32.2 சதவீதம்) அதிகரித்துள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

By admin