0
கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே பாரம்பரியமாக ரம், பிராந்தி, ஒயின் போன்ற ஆல்கஹால்களில் உலர் பழங்களை ஊறவைத்து தயாரிக்கும் பிளம் கேக் நினைவுக்கு வரும்.
ஆனால், ஆல்கஹால் இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்க பெற்றோர்கள் தயங்குவது இயல்பு. இதற்கு சிறந்த தீர்வாக, ஆல்கஹால் இல்லாமலே அச்சு அசலான கிறிஸ்மஸ் பிளம் கேக்கின் சுவையில் வீட்டிலேயே சுவையான கேக்கை எளிதாக தயாரிக்கலாம்.
குழந்தைகளும் நிம்மதியாக சாப்பிடக்கூடிய இந்த ரெசிபி இதோ👇
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 220 கிராம்
வெண்ணெய் – 220 கிராம்
நாட்டு சர்க்கரை – 220 கிராம்
முட்டை – 3
வெண்ணிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
உப்பு – ½ ஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு, பட்டை அரைத்த பொடி – 1 ஸ்பூன்
உலர் பழங்கள் & நட்ஸ்கள் (தேவையான அளவு):
பேரீச்சம்பழம்
மஞ்சள் திராட்சை
கருப்பு திராட்சை
செர்ரி
கிரான்பெர்ரி
நீல பெர்ரி
பிளம்
கிவி
மாம்பழத் துண்டுகள்
பாதாம்
முந்திரி
வால்நட்ஸ்
தயாரிப்பு முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிய அனைத்து உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்க்கவும்
ஆல்கஹாலுக்கு மாற்றாக தேவையான அளவு ஆரஞ்சு சாறு சேர்த்து, லேசாக மசித்து நன்றாக கிளறவும்
இந்த கலவையை ஆறவைத்து தனியாக வைத்து கொள்ளவும்
மற்றொரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்
கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணிலா எசன்ஸ், ஏலக்காய்–கிராம்பு–பட்டை பொடி மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து சலித்து கொள்ளவும்
சலித்த மாவு கலவையில் முட்டை கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்
அதில் ஆறவைத்த உலர் பழ கலவையையும் சேர்த்து நன்றாக மேஷ் செய்யவும்
தயாரான மாவை கேக் டின் அல்லது ஓவனில் ஊற்றி, 160°C–170°C குறைந்த வெப்பநிலையில் மெதுவாக சுடவும்
சுவையான, மென்மையான நான்-ஆல்கஹால் கிறிஸ்மஸ் பிளம் கேக் தயார்!
இந்த கிறிஸ்மஸில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒரே மகிழ்ச்சியுடன் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான பாரம்பரிய இனிப்பு இதுதான் 🎄🍰