• Fri. Mar 14th, 2025

24×7 Live News

Apdin News

கிளர்ச்சிப்படையினரால் கடத்தப்பட்ட ரயில் பயணிகளை பாகிஸ்தான் இராணுவம் மீட்டது

Byadmin

Mar 13, 2025


பாகிஸ்தானில் கிளர்ச்சிப்படையினர் கடத்திய பயணிகள் ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக, அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

பயணிகளை மீட்கும் நடவடிக்கையின் போது பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 28 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், “இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் AFP செய்திக்கு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி : பாகிஸ்தானில் 450 பேருடன் பயணித்த ரயில் கிளர்ச்சிப்படையினரால் கடத்தல்; தொடர்பு துண்டிப்பு!

குறித்த ரயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய நபர்கள் ரயிலை வழிமறித்து, பயணிகளை தடுத்துவைத்தனர்.

பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் என்ற பிரிவினைவாத அமைப்பு இந்தக் கடத்தலுக்கு உரிமை கோரியது.

The post கிளர்ச்சிப்படையினரால் கடத்தப்பட்ட ரயில் பயணிகளை பாகிஸ்தான் இராணுவம் மீட்டது appeared first on Vanakkam London.

By admin