• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

கிளிநொச்சியில் கடும் மழை | பல வீடுகளுக்குள் வெள்ளம்

Byadmin

Apr 28, 2025


கிளிநொச்சியில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (27) பகல்  சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வீதிகளில்  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது.

அத்தோடு பொது மக்களின்   வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர்  சென்றமையால்  அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக நகர் புறங்களில்  அமைக்கப்பட்டுள்ள முறையற்ற மதில்கள் காரணமாக வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலையில் வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் வெள்ளம ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாது பொது மக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

By admin