• Mon. Aug 11th, 2025

24×7 Live News

Apdin News

கிளிநொச்சியில் கார் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

Byadmin

Aug 11, 2025


கிளிநொச்சி, அக்கராயன் – முறிகண்டி பிரதான வீதியின் அமைதிபுரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடபெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முறிகண்டிப் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் எதிரே வந்த கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இயக்கச்சி, பளைப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

By admin