கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை டிப்பர் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
பரந்தன் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் யதுகிரி (வயது 31) என்ற பெண்ணே உயிரிழந்தார்.
கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, பின்னால் வந்த டிப்பர் முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதனால் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கிளிநொச்சியில் டிப்பர் மோதி பெண்ணொருவர் பலி! – சாரதி நையப்புடைப்பு appeared first on Vanakkam London.