1
கிளிநொச்சியில் தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது.
செல்வநாயகம் அறக்கட்டளையினுடைய ஏற்பாட்டில் இன்றையதினம் காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் மற்றும் முன்னாள் யாழ் இந்தியத்தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் முன்னதாக ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கூட்டுறவு சங்க மண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.