0
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது மாவட்ட பொலிஸ்மா அதிபர் எஸ்.டி. அங்கமான் தலைமையின் கீழ் உள்ள மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி குணத்திலக்க அவர்களின் 18 பேர் கொண்ட அணியினர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.