1
யாழ்ப்பாணம், நீர்வேலியை தலமையகமாகக் கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்களை நாட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் Green Layer சுற்றுசூழல் அமைப்பு, தனது சேவைகளை மேலும் விரிவாக்கும் முயற்சியாக, கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள Kilipeople அமைப்பின் அலுவலக வளாகத்தில், Green Layer – Kilinochchi கிளையை 18/10/2025 அன்று விமர்சையாக திறந்து வைத்தது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரும், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதற்கு கூடுதலாக, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இவ்விழாவின் போது, 2022ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படும் பசுமை புரவலர் விருதுகள், இயற்கையை நேசித்து சமூகத்தில் முக்கிய பங்களிப்பை அளித்த 6 தேர்வுசெய்யப்பட்ட இயற்கை ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது, சுற்றுசூழலை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரமாக வழங்கப்படும் உன்னத விருதாகக் கருதப்படுகிறது.
Green Layer அமைப்பின் புதிய கிளை, கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இயற்கை நட்பு செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முக்கிய தளமாக இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.