• Wed. Mar 26th, 2025

24×7 Live News

Apdin News

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சலால் மரணம்!

Byadmin

Mar 24, 2025


காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, தர்மபுரம், உழவனூரைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான நடராசா இன்பராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தர் கடந்த 19ஆம் திகதி இரவு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளைத் தர்மபுரம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

The post கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காய்ச்சலால் மரணம்! appeared first on Vanakkam London.

By admin