எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி கிளி மக்கள் அமைப்பு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வினை இலண்டனில் நடாத்துகின்றது. இந்த இந்நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பாகவும் முக்கியத்துவம் தொடர்பாகவும் இவ்வமைப்பின் செயலாளர் வைத்தியர் மதியழகன் அவர்களை வினவியபோது!
வணக்கம். என் பேர் டாக்டர் மதி. நான் கிளி பீப்பிள் (KILI PEOPLE) அமைப்பின் செயலாளராக இருக்கிறேன். முதல்கண் வணக்கம் இலண்டன் மீடியாவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து கொண்டு,
உங்கள் எல்லோருக்கும் தெரியும் கிளி பீப்பிள் அமைப்பானது இலண்டன்ல கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டர் நிறுவனமாக இயங்கி வருகின்றது.
நாங்கள் ஒன்றுவிட்ட ஒரு வருடம் அதாவது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிகப்பெரிய மெகா ஒன்றுகூடல் நிகழ்ச்சியை இலண்டன்ல ஹரோ பகுதியில் நடாத்துவதுண்டு, பெரும்பாலும், நாங்க அந்த Byron மண்டபத்தில்தான் கடந்த மூன்று நான்கு தடவைகளாக செய்து கொண்டிருக்கின்றோம்.
வழமைபோல் இந்த முறையும் எதிர்வரும் 14ஆம் திகதி மார்ச் மாசம் அதே இடத்தில் கிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடலை நடாத்த இருக்கின்றோம்.
இது ஒரு இசைநிகழ்வுடன் இணைந்த பல்சுவை நிகழ்வாக நடைபெற உள்ளது, ஒரு உற்சாகமான நிகழ்வாக இருக்கும், உங்களுக்கு நல்ல வேடிக்கையாகவும் இருக்கும், எல்லோரும் கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகின்றோம்.
இதுல வந்து டான்ஸ் இருக்கு, மியூசிக் இருக்குது, 3 course buffet meal இருக்குது, பார் இருக்குது, நல்ல ஸ்பீசஸ் இருக்கு. அதைவிட விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.
கிளி மக்கள் அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறைசார்ந்த சமூகப்பணி செய்பவர்களுக்கு “மண்ணின் மைந்தன்” அல்லது “மண்ணின் மகள்” விருது வழங்குவது வழக்கம். இந்த முறையும் அந்த மண்ணின் மைந்தர்களை கௌரவிப்பதற்கு உள்ளோம். 2024ம் 2025ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தர்களை அறிவிக்க உள்ளோம்.
ஒருவர் முள்ளிவாய்க்காலுக்கு முதலும் பின்னரும் கடமையாற்றி கொண்டிருக்கின்ற ஒரு வைத்தியர் 2024ம் ஆண்டுக்கான விருதைப்பெற, தொடர்ந்து இரண்டு விவசாயிகள் இணைந்து 2025ம் ஆண்டுக்கான விருதைப்பெற இருக்கின்றார்கள். கிளிநொச்சி ஒரு விவசாயப் பிரதேசமாகும், பாரம்பரிய விவசாயமுறைமையில் வினைத்திறனுடன் செயல்பட்ட மூத்த விவசாயி ஒருவரும் தற்போதைய நவீன முறைமையில் தொழில்நுட்ப உள்வாங்கல்களுடன் பயணிக்கும் இளந்தலைமுறை விவசாயி ஒருவரும் இணைந்து அந்த விருதைப் பெற உள்ளார்கள். உங்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்த இருக்கின்றோம்.
எல்லோரையும் இந்த நிகழ்வுக்கு வருகைதந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் நான்கு பிரதேசச் செயலக பிரிவுகள் இருக்கின்றது. பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி என்று அனைத்துப் பிரதேசங்களுக்கும் பொதுவான அமைப்பாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு காணப்படுகின்றது, அதாவது மாவட்டத்துக்குரிய அமைப்பு.
அதனால் UK இல் இருக்கின்ற அனைத்து கிளிநொச்சி மாவட்ட உறவுகளும் கிளிநொச்சி மாவட்ட நலன் விரும்பிகளும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வாக இருக்கும். நன்றி.

The post கிளிநொச்சி மக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிகழ்வில் விருதுபெறும் மண்ணின் மைந்தர்களை அறிமுகம் செய்யவுள்ளோம் | செயலாளர் வைத்தியர் மதியழகன் appeared first on Vanakkam London.