0
மாணவர்களிடையே பன்முக வாசிப்பை மேம்படுத்தும் வகையில்கடந்த ஒக்ரோபர் மாதம் முழுவதும் கல்லூரியில் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வந்திருந்தது.
அந்தவகையில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல் அறிமுகம், கருத்துரைகள், “பாலு மகேந்திரா ‘நூலக தரிசிப்பு ,போட்டிகள் என்பன மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு நிறைவாக இப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை
05 /11 /2024 அன்று கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் திரு சவிரி பூலோக ராஜா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய இப்பரிசில் நிகழ்வில் கதை கூறுதல், வாசிப்பு அளிக்கை, கட்டுரை, நூல் விமர்சனம், போன்ற போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பெறுமதியான ஈழத்து படைப்பாளிகளின் நூல் பொதிகளும் பரிசாக வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
இப்பரிசில் வழங்கும் நிகழ்விற்கு ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் திருமதி றமணன் ஜெயரூப சாந்தி அவர்களும் அவருடைய புதல்வி செல்வி. றமணன் சாராரூபினா அவர்களும் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நிதி அனுசரணையை வழங்கியதோடு மட்டுமின்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி மதிப்பளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.