• Wed. Nov 27th, 2024

24×7 Live News

Apdin News

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 721 குடும்பங்கள், 2476 பேர் பாதிப்பு

Byadmin

Nov 27, 2024


கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 721 குடும்பங்களைச் சேர்ந்த 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடர் நிலை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளீதரன்,

இரணைமடு குளத்துக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதனால், மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக வான் கதவுகள் இன்று  திறக்கப்படலாம்.

எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

அதனையடுத்து, அனர்த்தம் தொடர்பில் தகவல் தெரிவித்த மாவட்ட செயலாளர்,

சீரற்ற காலநிலை காரணமாக 721 குடும்பங்களைச் சேர்ந்த  2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை விட சிறிய குளங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அனர்த்த நிலைமையை எதிர்கொண்டால் 0212285330, 0760994885 கொண்டு தமக்கான உதவியினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

By admin