• Wed. Oct 30th, 2024

24×7 Live News

Apdin News

கிழக்கிலிருந்து முதலாவது பெண் கிரிக்கெட் மத்தியஸ்தர் ஆனார் எம்மா குளோறியா

Byadmin

Oct 30, 2024


கிரிக்கெட் மத்தியஸ்தராக மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியை எம்மா குளோறியா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் மத்தியஸ்தர்களுக்கான பரீட்சையில் சித்தி அடைந்ததை அடுத்து அவர் 5ஆம் நிலை மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து கிரிக்கெட் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண் எம்மா குளோறியா ஆவார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட பெண்கள் கடின டென்னிஸ் பந்து (Hard Tennis Ball) கிரிக்கெட் போட்டியில் மத்தியஸ்தராக எம்மா குளோறியா முதல் தடவையாக கடமையாற்றினார்.

மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியான இவர் அக் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவி ஆவார்.

தற்போது வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியையாக கடமையாற்றிவரும் எம்மா குளோறியா, இலங்கை கிரிக்கெட் மத்தியஸ்தர் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளை மத்தியஸ்தர்களில் ஒருவாராக இடம்பெறுகிறார்.

இவர் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல்தரப்பட்ட விளையாட்டுக்களில் பங்குபற்றி மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

By admin