• Sat. Oct 19th, 2024

24×7 Live News

Apdin News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

Byadmin

Oct 19, 2024


சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஜே. கே. சந்துரு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, சுப்பர் சுப்பராயன், ஜோன் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கதையின் நாயகியான கீர்த்தி சுரேஷ் யார்? என்ற வினாவை கதாபாத்திரங்கள் மூலம் எழுப்பி அதற்கு டைட்டிலை விடையாக அளித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

இது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

The post கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin