• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

கீர் கங்கா: 1835க்கு பிறகு பேரழிவை ஏற்படுத்திய இமயமலை ஆற்றின் கதை

Byadmin

Aug 7, 2025


தராலி கிராமத்தில் மீட்புப் பணிகள்

பட மூலாதாரம், Defence PRO

படக்குறிப்பு, இந்திய ராணுவமும் துணை ராணுவப் படைகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன

சீன எல்லையை ஒட்டிய உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த சம்பவத்தின் காணொளிகளில், உள்ளூர் மக்கள் கூக்குரலிட்டு ஒருவரை ஒருவர் இந்த பேரிடர் குறித்து எச்சரித்து, உயிரை காத்துக்கொள்ள ஓடும்படி வலியுறுத்துவதை கேட்கமுடிகிறது.

வேகமாக பாயும் வெள்ளத்தாலும் அது கொண்டு வந்த கழிவுகளாலும் வீடுகளும், பல அடுக்கு மாடி கட்டடங்களும் சீட்டுக்கட்டுப் போல் சரிவதை காணொளியில் காணமுடிகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாகவும், பேரிடர் மேலாண்மை படைகளுடன் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையின் உதவியும் பெறப்படுவதாக உத்தராகண்ட் அரசு கூறுகிறது.

By admin