• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு? – ஆச்சர்யப்படுத்தும் ஆய்வு முடிவுகள்

Byadmin

Sep 23, 2025


தமிழ்நாடு, அகழாய்வு, தொல்லியல் துறை, திருவண்ணாமலை, சிந்துசமவெளி நாகரீகம், ஹராப்பா

பட மூலாதாரம், TN Archaeology Department

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த காலக் கணிப்பும் தொல்பொருட்களும், அந்த இடத்திற்கும் சிந்துச் சமவெளி பிரதேசத்திற்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுன்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ்நமண்டி தொல்லியல் தளத்தில் கிடைத்த கரிமப் பொருளைக் காலக் கணிப்பிற்கு உட்படுத்தியதில் அதனுடைய காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு எனத் தெரியவந்திருக்கிறது. அதே பகுதியில் வடமேற்கிந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய, வேலைப்பாடுகள் மிகுந்த சூதுபவள மணிகளும் கிடைத்திருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்புகள், இந்தப் பகுதிக்கும் சிந்து சமவெளிப் பகுதிக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாடு தொல்லியல் துறை சமீபத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வு முடிவுகள், சிந்துச் சமவெளி கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டதன் நூற்றாண்டு குறித்த நூல் என நான்கு நூல்கள் சமீபத்தில் மதுரையில் தொல்லியல் துறையால் வெளியியப்பட்டன.

By admin