• Thu. Oct 24th, 2024

24×7 Live News

Apdin News

குஜராத்: கண்புரை அறுவை சிகிச்சைக்கு வந்த 200 பேர் அவர்களுக்கு தெரியாமலே பாஜகவில் சேர்க்கப்பட்டார்களா? எங்கு நடந்தது?

Byadmin

Oct 24, 2024


கண்புரை அறுவை சிகிச்சைக்கு வந்த 200 நோயாளிகளுக்கே தெரியாமல் அவர்களை பாஜகவில் உறுப்பினர்களாக்கியது எப்படி?

பட மூலாதாரம், bipin tankariya

படக்குறிப்பு, கமலேஷ் தும்மர், தனக்கே தெரியாமல் பாஜகவில் உறுப்பினராக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்

”ஓய்வு பெற்ற நான் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை வந்தேன். கண்புரை அறுவை சிகிச்சை முடிந்தது, அன்றிரவு நோயாளிகள் அனைவரும் கண்களில் மருந்து வைத்து கொண்டு தூங்க சென்றோம். ஒரு சகோதரர் வந்து எங்களை எழுப்பி எங்கள் தொலைபேசிகளை எடுத்து அதில் வந்த ஒடிபி (OTP) எண்களை பதிவிட்டு கொண்டார். அவர்கள் எங்கள் மொபைலை பயன்படுத்தி எங்களை பாஜக உறுப்பினர்கள் ஆக்கியது பின்னர்தான் எங்களுக்கு தெரிய வந்தது” என்றார் கமலேஷ்.

கமலேஷ் தும்மர், ஜுனாகத்தில் இருக்கும் கலீல்பூரில் வசிக்கிறார். அவர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக ராஜ்கோட்டில் உள்ள ராஞ்சோட்தாஸ்பாபு அறக்கட்டளை கண் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனுபாய் படேலுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மனுபாய் படேல் பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “ஒரு சகோதரர் எங்களிடம் வந்தார். என் மொபைலை கேட்டு வாங்கி ஏதோ செய்தார். அந்த நேரத்தில் நான் சற்று மயக்கத்தில் இருந்ததால் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. கமலேஷ் என் பக்கத்துப் படுக்கையில் இருந்தார். அதை அவரிடம் காண்பித்தபோது, ​​நான் பாஜக உறுப்பினரானதற்கான மெசேஜ் வந்திருப்பதாகக் கூறினார்.” என்று விவரித்தார்.

By admin